யாரும் அறிந்திடாத முத்து நகரம்; 6ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாம் - வாய்ப்பிருந்தா நிச்சயம் போங்க!

Dubai Arab Countries
By Sumathi Mar 24, 2023 07:37 AM GMT
Report

உம்-அல் குவைனின் சுற்றுலா மற்றும் தொல்லியல் துறை, ஐக்கிய அமீரக பல்கலைக்கழகம், எமிரேட்டில் உள்ள இத்தாலிய தொல்பொருள் நிறுவனம் மற்றும் நியூயார்க் பல்கலைகழகத்தில் உள்ள பண்டைய உலக ஆய்வு நிறுவனம் இனைந்து அகழ்வாராய்ச்சியில் பங்கேற்றன.

முத்து நகரம்

துபாயிலிருந்து வடகிழக்கே 50 கிமீ தொலைவில் உள்ள உம் அல்-குவைனில் உள்ள கோர் அல்-பெய்டா சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் சினியா தீவில் புதையுண்ட நகரம் இப்போது உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. அந்த நகரத்தை பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு உருவாக்கப்பட்டது.

யாரும் அறிந்திடாத முத்து நகரம்; 6ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாம் - வாய்ப்பிருந்தா நிச்சயம் போங்க! | Worlds Oldest Pearl Town Arab

இதே இடத்தில் முதலில் தொல்பொருள் ஆரய்ச்சியாளர்கள் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய ஒரு கிறிஸ்துவ மடாலயத்தைக் கண்டுபிடித்தனர். இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருள், ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் நூற்றுக்கனக்கான வீடுகள் இருந்திருக்கலாம்.

மிஸ் பண்ணாதீங்க

இது 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இஸ்லாமியத்திற்க்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கு கடற்கரைப் பாறை மற்றும் சுண்ணாம்பு சாந்துகளால் ஆன பல்வேறு வீடுகளைக் கண்டறிந்தனர். அவை நெரிசலான பகுதிகளிலிருந்து முற்றங்களைக் கொண்ட பரந்த வீடுகள் வரை, ஒரு சமூக அடுக்கை கொண்டுள்ளன. இப்பகுதியில் பருவகால இடங்களில் நடத்தப்படும் மற்ற முத்து வேலைகளைப் போலல்லாமல், ஆண்டு முழுவதும் வாழ்வதற்கான அறிகுறிகளையும் இந்த தளம் கொண்டுள்ளது.

யாரும் அறிந்திடாத முத்து நகரம்; 6ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாம் - வாய்ப்பிருந்தா நிச்சயம் போங்க! | Worlds Oldest Pearl Town Arab

ஏனென்றால் முத்துக்குளித்தல் என்பது சாதாரண விஷயமாக இருந்துள்ளது. உண்மையில் ஒரு காலத்தில் வளமான முத்து நகரம் நிலைத்து இருந்துள்ளது. அதுவும் முத்தெடுக்கும் சீசனுக்கு மட்டும் இல்லாமல் ஆண்டு முழுவதும் பரபரப்பான சந்தையாக இருந்த ஒரு ஊர்தான் கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரகம் போகும் வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் இந்த முத்து நகரத்தை பார்த்து மகிழுங்கள். IRCTC மூலம் இங்கிருந்து துபாய்க்கு 1 லட்சம் செலவில் சென்று வரலாம்.