உனக்கு 102 எனக்கு 100.. இவங்கதான் உலகின் மூத்த புதுமண தம்பதிகள் - இப்படி ஒரு காதல் கதையா?
உலகின் மூத்த புதுமணத் தம்பதிகளின் சுவாரஸ்யமான காதல் கதையை பருங்கள்.
மூத்த புதுமணத் தம்பதி
அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரை சேர்ந்தவர்கள் பெர்னி லிட்மேன்(100) மற்றும் மார்ஜோரி ஃபிடர்மேன்(102). இவர்கள் இருவரும் தங்களது 202 வயது மற்றும் 271 நாட்களுடன், முதுமை வாழ்க்கையை ஒன்றாக கழிக்க கடந்த வாரம் அவர்களது வீட்டில் திருமணம் செய்து கொண்டனர்.
முன்பு ஒரு விருந்தில் சந்தித்து கொண்ட இந்த ஜோடி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வதற்கு முன்பு ஒன்பது ஆண்டுகளாக உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்,
காதல் கதை
அவர்கள் இருவரும் தங்களது இளமை பருவத்தில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஒன்றாக பயின்றுள்ளது தெரியவந்தது. ஆனால், அப்போது அவர்களுக்கு பெரிதாக பழக்கம் ஏற்படவில்லை.
எனினும் பிற்கால வாழ்க்கையில் மட்டுமே நெருக்கமாகி உள்ளனர். பொறியாளராக இருந்த பெர்னியும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான மர்ஜோரி ஆகியோர், கடந்த 9 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.
நாளடைவில் அதுவே காதலாக மாறியுள்ளது. பெர்னியின் பேத்தி சாரா சிசெர்மேன் இது குறித்து பேசியதாவது, அவர்களின் நகைச்சுவை உணர்வும் புத்திசாலித்தனமும் அவர்களின் பிணைப்பின் அடித்தளமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.