உலகிலேயே வலிமையான நாடுகள்; அமெரிக்காதான் டாப் - இந்தியாவுக்கு எந்த இடம் பாருங்க!

United States of America China India Russia
By Sumathi Feb 02, 2024 10:01 AM GMT
Report

சக்திவாய்ந்த நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

சக்திவாய்ந்த நாடுகள்

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடுகள் குறித்த பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான ரேங்கில் சர்வதேச அளவில் அமெரிக்கா உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக உள்ளது.

china

தொடர்ந்து சீனா அதன் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியால் 2வது இடத்தை கொண்டுள்ளது. புவிசார் அரசியலில் ஆதிக்கம் மற்றும் ராணுவ வலிமைக்குப் பெயர் பெற்ற ரஷ்யா, 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த பாஸ்போர்ட் மட்டும் இருந்தா போதும்.. 194 நாடுகளுக்கு விசா வேண்டாம்!

இந்த பாஸ்போர்ட் மட்டும் இருந்தா போதும்.. 194 நாடுகளுக்கு விசா வேண்டாம்!

இந்தியாவுக்கு எந்த இடம்?

ஜெர்மனி 4வது இடத்தையும், இங்கிலாந்து மற்றும் தென் கொரியா முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளன. டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் பசுமையான ஆற்றலுக்கு முன்னுரிமை அளித்தது ஆகியவை காரணமாக பிரான்ஸ் 7வது இடத்தையும், ஏஐ துறையில் காட்டும் ஆதிக்கம் மற்றும் மின்சார வாகன தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற ஜப்பான் 8வது இடத்தையும் பெற்றுள்ளது.

india

டாப் 10இல் ஆப்பிரிக்க மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான பொருளாதாரம், உலக நாடுகள் உடனான உறவு மற்றும் ராணுவ சக்தி ஆகியவற்றை காரணமாக கொண்டு இந்தியா 12வது இடத்தை பெற்றுள்ளது.