31 % பேர் சாட்சி....உலகிலேயே பேய் அதிகமா இருக்கிற ஊர் எதுன்னு தெரியுமா..?

United Kingdom England
By Karthick Sep 05, 2023 10:12 AM GMT
Report

உலகத்தில் பேய்கள் மற்றும் அது போன்ற கதைகளை நேரில் பார்த்ததாக இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள பர்மிங்கஹாம் நகரம் முதலிடம் பெற்றுள்ளது.

உலகின் அமானுஷ்ய நகரம்

எந்த இடத்தில் வாழும் மனிதனாக இருந்தாலும், பேய் - அமானுஷ்யம் என்றால் அது யாரையுமே அச்சமடைய தான் செய்யும். தைரியமிக்க மனிதனாக இருப்பவரும் இது போன்ற விஷயங்களில் சற்று பயந்து தான் போவார்கள்.

worlds-most-ghostly-city

பலரும் பல இடங்களிலும், பல சமயங்களிலும் அமானுஷ்ய உணர்வுகளை எதிர்கொண்டதாக மக்கள் அங்கங்கே கூறும் நிலையிலும், உலகிலேயே மக்கள் அதிகளவில் எதிர்கொண்ட நகரமாக இங்கிலாந்தில் அமைந்துள்ள பர்மிங்கஹாம் நகரம் பெற்றுள்ளது. இந்த நகரில் மொத்தமாக வாழும் மக்களில் 31 % மக்கள் பேய்யை நேரில் கண்டதாக தெரிவித்துள்ளனர்.உலகிலேயே இதனை விட எந்த ஒரு பகுதி மக்களும் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தே நகரங்களே அதிகம்

வீடியோ கேம்ஸ் என்ற நிறுவனத்திற்காக நடைபெற்ற ஆய்வில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வில் இரண்டாவது இடத்தில் மீண்டும் இங்கிலாந்தை நாட்டை சேர்ந்த எடின்பர்க் நகரம் பிடித்துள்ளது. இந்நகரத்தில் வாழும் மக்களில் 25% பேர் பேய்யை நேரில் கண்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.

worlds-most-ghostly-city

அடுத்தடுத்த இடங்களில் முறையே நாட்டிங்காம், லிவர்பூல் போன்ற இங்கிலாந்து நகரங்களும் நியூகாஸ்டில் என்ற யுனைடெட் ஸ்டேட்ஸ் நகரமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.