மனிதர்களை கொன்று குவிக்கும் பழங்குடி மக்கள்- காரணத்தை கேட்டால் மிரண்டு போய்டுவீங்க
மனிதர்களை கொன்று குவிக்கும் ஆபத்தான பழங்குடி மக்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பழங்குடி மக்கள்
இன்றைய நவீன யுகத்தில் மக்கள் படிப்படியாக தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை மறந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதற்கு மாறாக பழங்குடி சமூகங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்களுடைய பழமையான பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றுகின்றன.
இந்த பழங்குடியினரில் சிலர் மிகவும் ஆபத்தானவர்களாகக் கூட கருதப்படுகிறார்கள். அந்த வகையில் மனிதர்களை கொன்று குவிக்கும் பழங்குடி மக்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். உலகின் மிகவும் ஆபத்தான பழங்குடியினரில் பிரபலமான முர்சி பழங்குடியினர் உள்ளனர்.
இவர்கள் தெற்கு எத்தியோப்பியா மற்றும் சூடானுக்கு அருகில் அமைந்துள்ள ஓமோ பள்ளத்தாக்கில் வசிக்கின்றனர். இவர்கள் மற்ற பழங்குடியினர்களை போல் அல்லாமல் உருவமைப்பில் வித்தியாசமாக உள்ளனர்.
முர்சி
அதாவது பழங்குடியினப் பெண்கள் தங்கள் கீழ் உதட்டில் மரத்தாலான அல்லது களிமண் வட்டு செருகப்படும் உடல் மாற்ற செயல்முறைக்கு உட்படுகிறார்கள். இப்படி செய்வதால் தீய கண்ணிலிருந்து அவர்களைப் பாதுகாக்க இது செய்யப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் முர்சி பழங்குடியினர் அவர்களின் அனுமதியின்றி எல்லைக்குள் யாராவது நுழைந்தாலோ அல்லது நெருங்கினாலோ, அவர்களைக் கொன்றுவிடுவார்கள்.இதுவரை நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளனர்.