உலகின் பெரிய அரண்மனை இந்தியாவில் தான்.. இதற்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?
உலகின் மிகப்பெரிய அரண்மனை இந்தியாவில் தான் இருக்கிறதென்றால் தெரியுமா?
லக்ஷ்மி விலாஸ்
குஜராத்-ல் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸே உலகின் மிகப்பெரிய அரண்மனை. இந்தியாவை முன்னர் ஆட்சி செய்த கெய்க்வாட் வம்சாவளியினரின் சொந்த குடியிருப்பு.
இது பக்கிங்காம் அரண்மனையை விட நான்கு மடங்கு பெரியது. 3,04,92,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. லக்ஷ்மி விலாஸ் அரண்மனை 170 க்கும் மேற்பட்ட அறைகளையும், 1 கோல்ஃப் மைதானத்தையும் கொண்டுள்ளது. இது கட்டப்பட்ட போதே ரூ.1 கோடி செலவானது.
சொந்தக்காரர் யார்?
இன்றைய மதிப்பில் இது பல்லாயிரம் கோடிக்கான மதிப்பு வாய்ந்தது. தற்போது மகாராஜா ரஞ்சித்சிங் கெய்க்வாட்டின் வாரிசான சமர்ஜித்சிங் கெய்க்வாட்டை மணந்த 44 வயதான ராதிகராஜே கெய்க்வாட்டின் இல்லமாக உள்ளது. அவரது தந்தை டாக்டர் எம்.கே.ரஞ்சித்சிங் ஜாலா ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்காக அரச பட்டத்தை துறந்தார்.
ராதிகராஜே கெய்க்வாட் டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் இந்திய வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர். வாசிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட இவர், திருமணத்திற்கு முன் முன்னணி பத்திரிகைகள் மற்றும் நாளிதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.