உலகின் முதல் குளோன் செய்யப்பட்ட ஓநாய் : வைரலாகும் புகைப்படம்

Viral Photos
By Irumporai Sep 20, 2022 08:49 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பெய்ஜிங்கை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் குளோன் செய்யப்பட்ட ஓநாயை உருவாக்கியுள்ளனர்.

குளோனிங்கில் ஓநாய்

பெய்ஜிங்கைச் சேர்ந்த மரபணு நிறுவன விஞ்ஞானிகள், ஒரு காட்டு ஆர்க்டிக் ஓநாயை உலகில் முதல் முறையாக வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சி குறித்து விஞ்ஞானிகள் கூறும் போது இரண்டு வருட கடினமான முயற்சிகளுக்குப் பிறகு, ஆர்க்டிக் ஓநாய் வெற்றிகரமாக குளோனிங் செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.

உலகின் முதல் குளோன் செய்யப்பட்ட ஓநாய் :  வைரலாகும் புகைப்படம் | Worlds First Cloned Wolf Viral

மாயா என்ற பெயரிடப்பட்ட அந்த குளோன் ஓநாய் பிறந்து 100 நாட்கள் பிறகும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

ஆபத்தான ஆராய்ச்சி

மேலும் இந்த ஆராய்ச்சி அரிய மற்றும் ஆபத்தான விலங்குகளின் இனப்பெருக்கத்தில் குளோனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான மைல்கல்லைக் இது குறிக்கிறது. ஆனாலும் இது உயிரினங்களின் வளர்ச்சி, மற்றும் உணவு சங்கிலியினை உடைக்கும் வகையில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.