மனிதர்களின் மூளையை சாப்பிடும் உலகின் ஆபத்தான கூட்டம் - மிரளவைக்கும் பின்னணி!
மூளையை சாப்பிடும் உலகின் மிகவும் ஆபத்தான பழங்குடியினர் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
அஸ்மத் பழங்குடியினர்
இந்தோனேசியாவின் தெற்கு பப்புவா மாகாணத்தில் வசிப்பவர்கள் அஸ்மத் பழங்குடியினர்கள். கி.பி. 1623ஆம் ஆண்டு ஐரோப்பியர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
சிக்கலான மற்றும் கவர்ச்சிகரமான மர சிற்பங்கள் மற்றும் செதுக்கல்களைச் செய்வதில் புகழ் பெற்றவர்கள். 1950களில் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டு வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டனர்.
ஆபத்தான கூட்டம்
இவர்கள் சடங்கு, நரமாமிசம், மனித சதையை சாப்பிடுவதைத் தவிர, தங்கள் எதிரிகளின் மண்டை ஓடுகளை உணவு சமைக்கப் பயன்படுத்துகின்றனர். மேலும், இறந்த எதிரியின் உடலில் இருந்து எடுக்கப்படும் எந்தவொரு பொருளையும் சவ்வரிசியுடன் கலந்து, பனை ஓலைகளில் சுற்றி, பின்னர் தீயில் வறுத்து உட்கொள்கின்றனர்.
இது அவர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தங்கள் எதிரிகளின் எச்சங்களை பல்வேறு அலங்காரங்களுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த நடைமுறை அவர்களின் மூதாதையர்களின் ஆவிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று நம்புகிறார்கள்.
முன்னதாக 1961ல் அப்போதைய நியூயார்க் ஆளுநர் நெல்சன் ராக்பெல்லரின் 23 வயது மகன் மைக்கேல் ராக்பெல்லர், பப்புவா பகுதியில் மாயமானதாகவும், அவரை அஸ்மத் பழங்குடியினர் கொன்று சாப்பிட்டதாகவும் பரவலாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.