உலகின் மிகவும் மாசடைந்த நகரங்கள்.. பட்டியலில்13 இடங்களை பிடித்த இந்தியா -அதிர்ச்சி தகவல்!
உலகின் டாப் 20 மிகவும் மாசடைந்த நகரங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மாசு
2024 ஆண்டுகான உலக காற்று தர அறிக்கையை சுவிட்சர்லாந்தின் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐக்யூ ஏர், வெளியிட்டுள்ளது. அதன்படி, உலக அளவில் மிகவும் மோசமாக காற்று மாசடைந்த 20 நகரங்கள் பட்டியலில் 13 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
உலக அளவில் மிகவும் மாசடைந்த தலைநகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.பிர்னிஹட் (அசாம்), டெல்லி, முல்லன்பூர் (பஞ்சாப்), பரிதாபாத், லோனி, புதுடெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர் மற்றும் நொய்டா ஆகிய 13 இந்திய நகரங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.
இந்திய நகரங்கள்
இது வருடாந்திர PM2.5 அளவுகள் WHO வரம்பான ஒரு கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராம் என்பதை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. PM2.5 என்பது 2.5 மைக்ரான்களுக்கும் குறைவான காற்று மாசுபாட்டின் சிறிய துகள்களைக் குறிக்கிறது.
அவை நுரையீரல் மற்றும் ரத்த ஓட்டத்தில் நுழைந்து சுவாசப் பிரச்சனைகள், இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு கூட வழிவகுக்கும். 2023-ல் 3-ம் இடத்தில் இருந்த இந்தியா, 2024-ல் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.