கொரோனாவை ஒழிக்க 2 கோடி பேரை உயிருடன் இரும்பு பெட்டிகளில் அடைத்து சீனா சித்திரவதை - அதிர்ச்சி தகவல்

corona world zero covid china govt People trouble iron boxes alive
By Nandhini Jan 13, 2022 06:30 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கொரோனா இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் சீனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக உயிருடன் இரும்பு பெட்டிகளில் அடைத்து துன்புறுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக இந்த வைரஸிலிருந்து தப்பிக்க முடியாமல் ஒட்டு மொத்த உலகமும் தத்தளித்து வருகிறது.

தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மூலம் மூன்றாவது அலை உருவாகி இருக்கிறது. இந்நிலையில், கொரோனாவின் பிறப்பிடமான சீனா "ஜீரோ கோவிட்" என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதை நடைமுறைப்படுத்த சீன அரசு சாமானிய மக்கள் மீது பயங்கர கொடுமைகளை நிகழ்த்தி வருகிறது. ஷான்சி மாகாணத்திலுள்ள சியான் நகரில் வரிசையாக சிறிய அளவிலான இரும்புப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெட்டியில் மக்கள் அடைத்து வைக்கப்பட்டு வருகிறார்கள்.

இத்தகவலை பல சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது. இதில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் வலுக்கட்டாயமாக இப்பெட்டிகளில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள் என்று தி டெய்லி மெயில் செய்தி தகவல் வெளியிட்டிருக்கிறது.

எந்த ஒரு பகுதியிலும் ஒரே ஒருவருக்குக்கூட தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், ஒட்டுமொத்த குடும்பமும் இப்பெட்டிகளுக்குள் அடைத்து வைக்கப்படுகிறார்கள். மக்களை நள்ளிரவிலும் வீடுகளிலிருந்து வெளியேற்றி இத்தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

"டிராக் அண்ட் டிரேஸ்" யுக்தியின் படி கொரோனா பாசிட்டிவ் ஆனவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். தற்போது 2 கோடி மக்கள் வீடுகளில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மக்கள் உணவு வாங்க கூட வெளியே செல்ல அனுமதி கிடையாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் அந்நாடு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் அந்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் இந்த அளவுக்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது. சாமானியர்களும், பொதுமக்களும் இதனால் சொல்லொணாத் துயரத்திற்கு அளாக்கப்பட்டு வருகிறார்கள்.

பல இடங்களில் உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டதால், சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் உதவி கேட்டு வருகிறார்கள்.