உங்களுக்கு இளநரை வருகிறதே என்று கவலையா? இந்த 7 யோகா செய்தால் போதும்!

special day yoga
By Anupriyamkumaresan Jun 21, 2021 04:00 AM GMT
Report

இன்று உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 7-வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

உங்களுக்கு இளநரை வருகிறதே என்று கவலையா? இந்த 7 யோகா செய்தால் போதும்! | World Yoga Day Health Tips For All

இந்த நிலையில் தலைமுடி பிரச்சினை தீர்வுக்கான சில யோகா ஆசனங்களை இதில் காண்போம்.. உங்களுக்கு நரைமுடி பிரச்சினை இருந்தால் கண்ட கண்ட கெமிக்கல்கள் நிறைந்த எண்ணெய்களை பயன்படுத்துவதை காட்டிலும் யோகா ஆசனங்களை செய்யலாம்.

ஏனெனில் யோகா ஆசனங்கள் உங்க உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து நரைமுடி பிரச்சினையை போக்குகிறது.

உஸ்த்ராசனா (ஒட்டகம் போன்ற நிலை) :

உங்களுக்கு இளநரை வருகிறதே என்று கவலையா? இந்த 7 யோகா செய்தால் போதும்! | World Yoga Day Health Tips For All

இந்த யோகா ஆசனத்தை செய்யும் போது தலைக்கு இரத்த ஓட்டம் ஆனது பாய்கிறது. இது முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு உதவுகிறது. இது தைராய்டு சுரப்பியை சமநிலைப்படுத்துகிறது. இந்த ஆசனம் உங்களுக்கு ஏற்படும் முடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் உதவி செய்யும். எனவே இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வரும் போது முன்கூட்டியே முடி உதிர்தல் கட்டுப்படுத்தப்படும்.

பவன்முக்தசனா (காற்று வெளியிடும் நிலை) :

உங்களுக்கு இளநரை வருகிறதே என்று கவலையா? இந்த 7 யோகா செய்தால் போதும்! | World Yoga Day Health Tips For All

பவன்முக்தசனா உங்க செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இது மலச்சிக்கலை நீக்குகிறது. இது அனைத்து செரிமான பிரச்சினைகளையும் போக்க உதவி செய்யும். இந்த ஆசனம் செய்யும் போது முடி வளர்ச்சி தூண்டப்பட்டு மனதானது அமைதியாகிறது.

வஜ்ராசனம் (இடி நிலை) :

உங்களுக்கு இளநரை வருகிறதே என்று கவலையா? இந்த 7 யோகா செய்தால் போதும்! | World Yoga Day Health Tips For All

வஜ்ராசனத்தை எளிதாக செய்து விடலாம். இந்த ஆசனமும் உங்க செரிமானத்திற்கு உதவுகிறது. தலையில் உள்ள மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது. இது தலைமுடி உதிர்தல் மற்றும் சேதத்தை தடுக்கிறது. இந்த ஆசனம் நரைமுடி வருவதற்கு முக்கிய காரணமான மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை போக்குகிறது. எனவே உணவுக்கு பிறகு இதை நீங்கள் முயற்சி செய்யலாம்

ஆதோ முக ஸ்வானாசனா (நாய் நிலை) :

உங்களுக்கு இளநரை வருகிறதே என்று கவலையா? இந்த 7 யோகா செய்தால் போதும்! | World Yoga Day Health Tips For All 

இந்த ஆசனம் உங்களை மன அழுத்தத்தில் இருந்து விலக்கி வைக்க உதவுகிறது. இதனால் முன்கூட்டியே நரைமுடி ஏற்படுவதை குறைக்கிறது. இது உங்க கூந்தலை கருப்பாக இளமையாக வைக்க உதவி செய்யும். உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது உதவி செய்யும்.

நகங்களை தேய்த்தல் :

உங்களுக்கு இளநரை வருகிறதே என்று கவலையா? இந்த 7 யோகா செய்தால் போதும்! | World Yoga Day Health Tips For All

இது பலயம் யோகா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நிதானமான பயிற்சி ஆகும். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜனை தூண்ட உதவுகிறது. இது மயிர்க்கால்களை புதுப்பிக்கவும் உதவுகிறது. டி.எச்.டி (டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன்) கட்டுப்படுத்துவதன் மூலம் உண்மையான வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இது நரைமுடி வளர விடாமல் தடுக்க உதவி செய்யும்.

முன்னோக்கிய வளைவு நிலை :

உங்களுக்கு இளநரை வருகிறதே என்று கவலையா? இந்த 7 யோகா செய்தால் போதும்! | World Yoga Day Health Tips For All

இந்த நிலையில் உடலை முன்னோக்கி வளைக்கின்றனர். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த ஆசனம் மூளையை அமைதிபடுத்த உதவி செய்யும். இதன் மூலம் மன அழுத்தம் மற்றும் லேசான மனச்சோர்வை நீக்குகிறது. கூந்தல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது.

சிரசாசனா :

உங்களுக்கு இளநரை வருகிறதே என்று கவலையா? இந்த 7 யோகா செய்தால் போதும்! | World Yoga Day Health Tips For All

இது தலைகீழாக தொங்கக் கூடிய நிலையாகும். தலையை தலைகீழாக வைக்கும் போது இரத்த ஓட்டம் ஆனது அதிகரிக்கிறது. இந்த ஆசனம் மன அழுத்தத்தை குறைக்கிறது. உங்க மனதை அமைதிபடுத்த உதவி செய்யும். இந்த ஆசனம் முடி உதிர்தல், வழுக்கை மற்றும் முடி மெலிந்து போதல் போன்றவற்றை தடுக்கும். மேலும் புதிய முடி மீண்டும் வளர உதவுகிறது