2023ல் அதிகம் Delete செய்யப்பட Apps: முதலிடத்தில் அந்த செயலியா? - எது.. யூடியூபுமா..!

Youtube Instagram World Technology
By Jiyath Dec 24, 2023 09:00 AM GMT
Report

உலகளவில் பயனர்கள் 2023ம் ஆண்டு அதிகம் டெலிட் செய்த செயலிகள் குறித்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் 

உலகம் முழுவதும் சுமார் 480 கோடி பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப், போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைதான் அதிகம்.

2023ல் அதிகம் Delete செய்யப்பட Apps: முதலிடத்தில் அந்த செயலியா? - எது.. யூடியூபுமா..! | World Wide Most Deleted App In 2023 Instagaram

ஆனால் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தாதவர்கள் அதிகம் இருக்க முடியாது என்று நாம் நினைப்போம். ஆனால் இங்குதான் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. உலகளவில் பயனர்கள் 2023ம் ஆண்டு அதிகம் டெலிட் செய்த செயலி குறித்து, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான TRG Datacentres ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

டெலிட் செய்யப்பட்டவை 

அதில் சற்றும் எதிர்பாராத விதமாக இன்ஸ்டாகிராம் செயலி அதிகம் டெலிட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஒவ்வொரு மாதமும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் கணக்கை எப்படி நீக்குவது என்று தொடர்ச்சியாக இணையத்தில் தேடியுள்ளார்களாம்.

2023ல் அதிகம் Delete செய்யப்பட Apps: முதலிடத்தில் அந்த செயலியா? - எது.. யூடியூபுமா..! | World Wide Most Deleted App In 2023 Instagaram

இதற்கு அடுத்தடுத்த இடங்களில், ஸ்னாப்சாட், ட்விட்டர், டெலிகிராம், பேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப் செயலிகளை பயனாளர்கள் எப்படி அழிக்க வேண்டும் என தேடி உள்ளனர். இருந்தாலும் சமூக வலைத்தள உலகில் இன்ஸ்டாகிராம் முன்னணி செயலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.