விண்வெளியிலும் விடாமல் உடற்பயிற்சி செய்யும் விண்வெளி வீரர் - வைரல் வீடியோ
ஒரு பிரெஞ்சு விண்வெளி வீரர் விண்வெளியில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆமாம், விண்வெளி வீரர் எங்கிருந்தாலும், பிட்னஸுக்கு தான் முன்னுரிமை அளிக்கிறார் என்பதில் இந்த வீடியோ மூலம் உறுதியாகி இருக்கிறது.
இந்த வைரல் வீடியோவில் சர்வதேச விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட், உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்தி, கடுமையாக உடற் பயிற்சி செய்வதைக் காண முடிகிறது.
இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள அவர், பெஸ்கெட் பிரெஞ்சு மொழியில் “Renforcement musculaire de l’espace” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அதாவது "விண்வெளியில் இருந்து பாடி பில்டிங்" என்பது அதன் பொருளாகும்.
இதோ அந்த வீடியோ -