செக்ஸ் பற்றிய கேள்விக்கு நியூசிலாந்து பிரதமரின் பதில்! வீடியோ வைரல்

world-viral-video
By Nandhini Sep 11, 2021 09:44 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நடத்திய ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் செக்ஸ் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது, அந்த கேள்வி ​​அவருக்கு ஒரு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டு, திடீரென அவரது முகத்தின் நிறம் மாறியது. ஆனால், அவர் அதற்கு அளித்த பதில் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

பி.எம். ஆர்டெர்ன் ஒரு செய்தியாளர் சந்திப்பை அழைத்தார். நியூசிலாந்தில் கொரோனா வைரஸைத் திறம்படத் தடுக்க பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் எடுத்த நடவடிக்கைகளுக்கு பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, அவரது சாதனை பற்றி பேச பிரதமர் செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மற்றும் நாட்டின் மருத்துவ இயக்குனர் ஜெனரல் டாக்டர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் ஆகியோர் நாட்டில் கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் எடுத்து கூறினார்கள்.

அப்போது, ஆக்லாந்து மருத்துவமனையில் நோயாளிக்கும், நோயாளியை காண வந்தவரும் உடல் உறவு கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு பற்றி குறிப்பிட்டு, உலகில் கொரானாவின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இவ்வாறு உடலுறவு கொள்வதால், கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி கேட்டார்.

இந்த கேள்வியினால், பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அதிர்ச்சி அடைந்தார். இந்த கேள்விக்கு அவரால் உடனடியாக பதில் கூற முடியவில்லை. ஆனால், அந்த கேள்விக் அவர் கூறிய பதில் சமூக ஊடகங்களில் வைரலானது.

பி.எம். ஆர்டெர்ன், 'கொரோனா வைரஸ் பரவல் இல்லாவிட்டாலும் கூட, மருத்துவமனையில் நோயாளியை பார்க்க வரும் போது, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று நினைக்கிறேன்' என்று பதில் கூறினார்.