ஆப்கானில் புதிய அரசுக்கு எதிராக போராடிய பெண்களை சவுக்கால் அடித்த தாலிபான்கள் - வீடியோ வைரல்

world-viral-video
By Nandhini Sep 11, 2021 07:48 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆப்கான் பெண்களை தாலிபான்கள் சவுக்கால் அடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு எதிராக போராடி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க பெண்கள் காபூல் தெருக்களில் இறங்கினார்.

அப்போது, அப்பெண்கள் தாக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தகவல் தெரிவித்தன. போராட்டங்களை படம்பிடிக்க முயன்ற சில பத்திரிகையாளர்களையும் தாலிபான்கள் தாக்கிய புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாலிபான்கள் சவுக்கால் அடிக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -