44 வயது பெண்ணை காதலிக்கும் 29 வயது இளைஞன் - சமூகவலைத்தளத்தில் மலர்ந்த காதல்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜூலி (44). இவர் ஒரு விதவைப் பெண். இவருக்கு 18 மற்றும் 21 வயதில் 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். இவருடைய கணவர் இறந்து விட்டார். இந்நிலையில், ஜூலி சமூகவலைத்தளத்தில் 29 வயது மதிக்கத்தக்க சாக்-ஐ சந்தித்திருக்கிறார்.

இதனையடுத்து, இவர்கள் இரண்டு பேர் தொடர்பான புகைப்படங்களை ஜூலி தன்னுடைய டிக் டாக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இவர்களுடைய புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வந்துள்ளன.

இந்நிலையில், அவர்கள் சமீபத்தில் தங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். அப்போது அவர் இந்த ஆண்டு மட்டும் நாங்கள் Cabo, Florida, Niagara வீழ்ச்சி போன்ற இடங்களுக்கு சென்றோம்.

இது குறித்து ஜூலி கூறுகையில், நாங்கள் இருவரும் நிறைய பணம் சம்பாதிக்கிறோம். குறிப்பாக நான் ஒரு மாதத்திற்கு 30 முதல் 40,000 டொலர் சம்பாதிக்கிறேன். அவன் மாதத்திற்கு 15000 டாலர் சம்பாதிக்கிறான். அவனுகாக நான் நிறைய கிப்ட்களை வாங்க விரும்புகிறேன். இதுவரை நாங்கள் 10-க்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டிருக்கிறோம். அடுத்த படியாக Exuma Bahamas மற்றும் then Costa Rica-வுக்கு செல்ல இருக்கிறோம் என்றார்.

இது தொடர்பாக சாக் கூறுகையில், அவர் என்னை மிகவும் காதலிக்கிறார். நன்றாக சமைத்து கொடுக்கிறார். நான் ஒவ்வொரு இரவும் தூங்க செல்லும் முன் அவர் தலைமுடியை தூங்கும் வரை வருடிவிடுவார். அவரை அந்தளவிற்கு பிடிக்கும் என்றார். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்