நாடு கடத்தப்பட உள்ள திருநங்கை : அதிர்ச்சி காரணம்! நடந்தது என்ன?
பெண் உடை உடுத்தியதற்காக ஒரு அழகி நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளார். அதற்குக் காரணம் நூர் சஜாட் (35) என்ற அந்த அழகி ஒரு திருநங்கை. பெண் உடை உடுத்தியதற்காக தண்டிக்கப்பட இருக்கிறாரா என்று பார்த்தால், அவர் மலேசியாவில் ஒரு மதம் தொடர்பான நிகழ்ச்சியில் பெண் உடை உடுத்தியுள்ளார்.
மலேசியாவில், திருநங்கை பெண் உடை உடுத்துவது இஸ்லாத்தை அவமதிக்கும் செயலாக கருதக்கப்படுகிறது. ஆகவே, நூர் மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு தப்பி ஓடியுள்ளார். ஆனால், அவர் தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக கூறி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை மலேசியாவுக்கு நாடு கடத்துமாறு அதிகாரிகள் தாய்லாந்தை வற்புறுத்தி வருகின்றனர்.
மலேசியாவில் அவர் 3 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், அதுவும் ஆண்கள் சிறையில். தனக்கு ஏராளம் கொலை மிரட்டல்கள் வருவதாகவும், அதனால் தான் மலேசியா செல்ல பயப்படுவதாகவும், தன்னை சமூக ஊடகம் ஒன்றில் பின்தொடரும் 3,12,000 பேருக்கும் தெரிவித்திருக்கிறார் நூர்.
அவர் மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவரை மோசமாக நடத்தப்படுவார் என்று கூறும் மனித உரிமை ஆர்வலர்கள், அவருக்கு புகலிடம் கொடுத்து ஆதரவு அளித்து வருகின்றார்கள்.
