பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

world-viral-news
By Nandhini Sep 28, 2021 06:53 AM GMT
Report

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

தற்போது அந்நாட்டு மக்களுக்கு பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனையடுத்து, அதிபர் ஜோ பைடன் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டார். அதன்பின்னர் அவர் பேசுகையில், கொரோனா வைரஸை வெல்லவும், உயிரை காப்பாற்றவும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக் கொண்டார். 

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் | World Viral News