அமெரிக்காவில் பயங்கரம் : போலீஸ் அதிகாரியின் முகத்தை அடித்து நொறுக்கிய இளைஞர்! அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியை கல்லால் அடித்து, அதனை தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன் மற்றும் மாக்னோலியாவில் அதிகாலை 1 மணியளவில் 2 போலீசார் அவர்களது வாகனத்துக்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பின்னாலிருந்து பதுங்கி பதுங்கி சென்ற இளைஞர், கீழே கிடந்த பெரிய செங்கல் ஒன்றை எடுத்து ஒரு போலீசார் முகத்தில் பலமாக பலமுறை தாக்கினார். உடனடியாக பக்கத்தில் இருந்த அதிகாரி தாக்குதல் நடத்தும் நபரை கட்டுப்படுத்த முயற்சி செய்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து ஓடி வந்த மேலும் 2 பேர் போலீசார் அந்த இளைஞரை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விலங்கினார்கள். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் வெளியிடவில்லை. ஆனால், அவரது பெயர் வில்லியம் டி மெக்லிஷ் என்பதையும், அவரது புகைப்படத்தையும், தாக்குதல் நடந்த சம்பவத்தை தனது செல்போனில் சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தார் அந்த இளைஞர்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு போலீசாருக்கு முகத்தில் பயங்கரமான காயம் ஏற்பட்டுள்ளது. மற்றோரு அதிகாரி தாக்குதல் நடத்திய இளைஞரால் பலமாக கடிக்கப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவருடையை கண் பிதுங்கி வெளியே வரும் அளவிற்கு அந்த தாக்குதல் நடந்துள்ளதாக ஆர்லாண்டோ போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மெக்லிஷ் மீது ஒரு சட்ட அமலாக்க அதிகாரியை கொலை முயற்சி செய்தல், கொடிய ஆயுதத்துடன் மோசமான தாக்குதல் மற்றும் கைது செய்வதை வன்முறையுடன் எதிர்ப்பது உட்பட பல குற்ற வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அவர் பெயில் இல்லாமல் ஆரஞ்சு கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
