பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீச்சு - பரபரப்பு சம்பவம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மீது முட்டையால் அடிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நேற்று மாலை லியோனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச உணவு வர்த்தக கண்காட்சிக்கு சென்றார். அப்போது, கூட்டத்தின் நடுவில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, சென்றபோது அவரது முகம் மற்றும் தோள்பட்டைக்கு இடையே ஒரு முட்டை வேகமாக வந்து விழுந்தது. ஆனால், அந்த முட்டை அவர் மீது உடைந்து தெறிக்கவில்லை. சட்டென்று, அவரது மெய் காப்பாளர்களால் அவரை பாதுகாத்தனர். மீண்டும் அவர் தாக்கப்படாமல் இருக்க பாதுகாவலர்கள் அவரை மறைத்துக்கொண்டார்கள்.
ஒருவர், தனது கையால் அவரது முகத்தையும் மறைத்துக்கொண்டார். அதே நேரத்தில், ஜனாதிபதியின் மீது முட்டையை வீசிய நபரை காவலர்கள் மடக்கிப்பிடித்தார்கள். மேலும், பாதுகாப்பு காரணத்திற்காக அந்த நபர் பாதுகாப்புப் படையினரால் சம்பவ இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது, சம்பவ இடத்தில் இருந்த செய்தியாளர்களிடம் ஜனாதிபதி பேசுகையில், மக்ரோன் முட்டையால் தாக்கப்பட்டது குறித்து பேசினார். "அந்த நபர் என்னிடம் ஏதாவது கேட்க வேண்டி இருந்தால், அவர் நேராக என்னிடம் வந்து கேட்கலாம் என்று கூறினார்.
ஏற்கெனவே, ஜூன் மாதம் தென்கிழக்கு பிரான்சில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு சென்ற போது ஒருவர், பிரெஞ்சு ஜனாதிபதியின் முகத்தில் அறைந்தார். தாக்குதல் நடத்தியவர் 4 மாத சிறைத்தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
