மர்மக்குழிக்குள் அழகிய நீர்வீழ்ச்சி - ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைக்கும் அதிசயம்!

world-viral-news
By Nandhini Sep 27, 2021 05:20 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஓமான் அல்லது ஒமான் சுல்தானகம் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இது அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்குக் கரையில் அமைந்திருக்கிறது. ஓமன் நாட்டில் உள்ள அல் மாரா பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ளது 'பர்ஹட்டின் கிணறு' என்று அழைக்கப்படும் மர்மக் குழி, 367 அடி ஆழமும், 30 மீட்டர் விட்டமும் கொண்டது.

மேலும், விசித்திரமான வட்டமான‌ நுழை வாயிலையும் கொண்டிருக்கிறது. வானிலிருந்து பார்த்தால் சிறிய துளை போன்று காட்சியளிக்கும். இதனை 'நரகத்தின் கிணறு' என்றும், இதில் பூதம் இருப்பதாகவும் உள்ளூர் மக்களிடையே கருத்து நிலவி வந்தது. மேலும், இது கடுமையான துர்நாற்றத்தையும் வீசி வந்தது.

இதனால், ஓமன் நாட்டின் குகை பயணக் குழுவைச் சேர்ந்த 10 ஆய்வாளர்கள் குழு, இந்த மர்ம குழி பற்றி ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. ஆய்வு குழுவினர் குழியில் உரிய உபகரணங்களுடன் எவ்வித தயக்கமுமின்றி தைரியமாக‌ இறங்கினார்கள். அந்த மர்மக்குழியின் உள்ளே நீண்ட குகை போன்று காட்சி அளித்தது.

அதன் உள்ளே சினிமா காட்சிகளில் காட்டப்படுவது போன்று அழகிய‌ நீர் வீழ்ச்சியும் தென்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அங்கு ஏராளமான பாம்புகள், இறந்த விலங்குகள், குகை முத்துக்களும் இருந்துள்ளன.

இவை அங்கு சென்ற ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக நிலவி வரும் மூட நம்பிக்கைக்கு இந்த ஆய்வு புள்ளி வைத்துள்ளது. 'இந்த மர்ம குழியில் எந்த பூதமும் கிடையாது. ஏமனின் வரலாறு குறித்த புதிய ஆய்வுகளுக்கான இடமாக இது திகழும்.

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த மர்மக்குழி உருவாகி இருக்கக் கூடும். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்த இறுதி ஆய்வுகள் வெளிவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மர்மக்குழிக்குள் அழகிய நீர்வீழ்ச்சி - ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைக்கும் அதிசயம்! | World Viral News

மர்மக்குழிக்குள் அழகிய நீர்வீழ்ச்சி - ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைக்கும் அதிசயம்! | World Viral News