யாராவது தப்பு செஞ்சா... மரண தண்டனை நிச்சயம்.. – தலிபான்களை எச்சரித்த அமெரிக்கா!

world-viral-news
By Nandhini Sep 26, 2021 11:10 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

மனித உரிமைகள் என்று கேட்டால் எத்தனை கிலோ என்று கேட்பார்கள் தலிபான்கள். மனிதர்களின் கை, கால்களை வெட்டுவார்கள். மரண தண்டனை கொடுப்பார்கள். இத்தனைக்கும் குற்றம் இழைத்தவர்கள் மிகப்பெரிய குற்றமெல்லாம் செய்திருக்க மாட்டார்கள். கேட்டால் இது எங்களது இஸ்லாம் ஷரியத் சட்டத்தில் உள்ளது.

அதனால்தான், தண்டனைகள் கொடுக்கிறோம் என்று பேசுவார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்திருக்கும் தலிபான்கள் தாங்கள் மனம் திருந்திவிட்டதாகவும், தாங்கள் ‘சீர்திருத்த’ ஆட்சி நடத்துவோம் எனவும் சத்தியப் பிரமாணம் எடுத்தார்கள்.

அதெல்லாம் மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் வரைக்கும் தான் நீடித்தது. அதற்குப் பின் கடந்த ஒரு மாத காலமாக பழைய கட்டுப்பாடுகளை மீண்டும் கொஞ்சம், கொஞ்சமாக கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஷரியத் சட்டப்படியே அனைத்தும் நடக்கும் என தண்டனைகளையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். அந்த ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனை தலிபான்கள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான முல்லா நூருதீன் துராபியின் உறுதி செய்திருக்கிறார். இது குறித்து அவர் அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில், “எல்லோரும் எங்களுடைய சட்டத்திட்டங்களையும் தண்டனைகளையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் நாங்கள் வேறு யாருடைய சட்டங்களையும் தண்டனைகளையும் கண்டுகொள்வதே கிடையாது. எங்கள் சட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என யாரும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் இஸ்லாமியத்தைப் பின்பற்றி வருகிறோம்.

தவறு செய்பவர்களுக்கு மைதானத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதுவும் குற்றத்திற்கு ஏற்ப கை, கால்களை துண்டிக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. மைதானங்களில் மரண தண்டனை வழங்கி இருக்கிறோம். கைகளைத் துண்டிப்பதால் அந்த நபர் அதே குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டார். எங்கள் தண்டனை முறை அமைதியையும் நிலையான தன்மையையும் கொண்டு வரும் என்று கூறியுள்ளார். தற்போது துராபியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது அமெரிக்கா.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக தரப்பில் கூறுகையில், “தலிபான்கள் ஷரியத் சட்டத்தின் கீழ் மேற்கொண்டுள்ளோம் எனக் கூறி நிறைவேற்றும் தண்டனைகள் தெளிவாக மனித உரிமைகளை மீறுவதாக இருக்கின்றன. தலிபான்களின் தண்டனை குறித்த அறிக்கை மட்டுமல்லாமல் அவர்களின் செயல்பாடுகளையும் நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்துக் கொண்டிருக்கிறோம். ஆப்கனில் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகளின் நலன் காக்க நாங்கள் துணை நிற்போம் என்று தெரிவித்துள்ளது. 

யாராவது தப்பு செஞ்சா... மரண தண்டனை நிச்சயம்.. – தலிபான்களை எச்சரித்த அமெரிக்கா! | World Viral News

யாராவது தப்பு செஞ்சா... மரண தண்டனை நிச்சயம்.. – தலிபான்களை எச்சரித்த அமெரிக்கா! | World Viral News