23,000 ஆண்டு பழமையான மனிதனின் கால் தடங்கள் கண்டுபிடிப்பு! ஆச்சரியத் தகவல்
23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் காலடி தடங்கள் வடக்கு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் தரப்பில் கூறியதாவது - "வடக்கு அமெரிக்காவின், நியூ மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட புதைப்படிவ கால் தடங்கள் சுமார் 23,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரம்பகால மனிதர்களின் நடமாட்டத்தை சுட்டிக் காட்டியுள்ளன.
முதல் முறையாக இம்மாதிரியான கால்தடங்கள் 2009ம் ஆண்டு வெள்ளை மணல் தேசிய பூங்காவில் உள்ள ஒரு வறண்ட ஏரிப் படுக்கையில் இதுபோன்ற கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற கண்டுபிடிப்புகள் அனைத்தும் நீண்ட காலமாக நிலவும் மர்மத்திற்கு வெளிச்சம் காட்ட முடியும். ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் எப்போது அமெரிக்காவிற்கு வந்தனர் என்பதையும் கண்டுபிடிக்க இத்தடயங்கள் உதவிக்கரமாக இருக்கும். ஆசியாவை, அலாஸ்காவுடன் இணைத்த நிலப்பாலம் வழியாக முந்தையை மனித இடப்பெயர்வுகள் இருந்ததாகவும் நம்பப்படுகின்றன.
சுமார் 13,000 முதல் 26,000 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மனித குடியேற்றங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் காலடி தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.
