‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் டேனியல் கிராக்கு கவுரவம் - பிரிட்டன் கப்பற்படை தளபதியாக நியமனம்

world-viral-news
By Nandhini Sep 24, 2021 02:30 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிராக் (53) பிரி்ட்டன் கப்பற்படையின் ராயல் நேவி கமாண்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நடிகர் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் அளவுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது முன்னணி ஜேம்ஸ் பாண்ட் நடிகரான டேனியல் கிராக் நடிப்பில் ‛நோ டைம் டூ டை’ என்ற பெயரில் பிரம்மாண்ட படம் தயாராகி இருக்கிறது. இந்த படம் செப்.30-ல் வெளியாக உள்ளது.

இந்நிலையில், டேனியல் கிராக்கை கவுரவிக்கும் விதமாக பிரி்ட்டன் கப்பற்டை கமாண்டராக நியமிப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக டேனியல் கிராக் தனது டுவிட்டர் பக்கத்தில் கப்பற்படை சீருடை அணிந்துள்ள புகைப்படம் வெளியிட்டிருக்கிறார். அதில் இப்படி ஒரு கவுரமிக்க பதவி எனக்கு கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.     

‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் டேனியல் கிராக்கு கவுரவம் - பிரிட்டன் கப்பற்படை தளபதியாக நியமனம் | World Viral News