இன்று வரை விஞ்ஞானிகளாலேயே கண்டுபிடிக்க முடியாத பங்களாதேஷின் அதிசய சிவன் கோவில் - ஆச்சரியமூட்டும் தகவல்?

world-viral-news
By Nandhini Sep 23, 2021 07:56 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அண்டை நாடான பங்களாதேஷ இஸ்லாமிய நாடாக இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானைப் போல இங்கும் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் வருகின்றது. இருந்தாலும், இங்குள்ள பழங்கால சிவன் கோவிலுக்கு வந்து தரிசிக்க தொலைதூரத்திலிருந்தும் மக்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த பழங்கால கோவிலின் அதிசய அக்னி குண்டம் தான் இதற்கு காரணமாக உள்ளது. இந்த அக்னி குண்ட சுடர் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டே உள்ளது. இன்று வரை இந்த அக்னி குண்டம் விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

பங்களாதேஷ் இந்து அமைப்பு இது குறித்து கூறியதாவது - இந்த கோவிலில் இருக்கும் அக்னி குண்டத்தில் தீ அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த சுடர் எங்கிருந்து வருகிறது என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பங்களாதேஷ் இந்து கவுன்சில் இந்த அதிசய சிவாலயத்தின் சில படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. ' மகாதேவன் அக்னி குண்டம்’ பற்றிய தகவலை அளித்த இந்த கவுன்சில் 'அக்னிகுண்டன் உள்ள இந்த சிவனின் பழமையான கோவில் சிட்டகாங்கில் அமைந்துள்ளது என கூறியுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளராலும் இதன் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

டுவிட்டரில் பகிரப்பட்ட அந்தக் கோவிலின் புகைப்படங்களில், கோவிலின் அக்னி குண்டம் ஒன்றில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பதை காணலாம். இந்த டுவிட்டர் பதிவிற்கு பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அடிப்படைவாதிகள் கோவிலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதோ அக்கோவிலின் புகைப்படங்கள் -