வட கொரியாவின் ரகசியங்களை தெள்ளத்தெளிவாக அம்பலப்படுத்திய செயற்கைக்கோள்! நிபுணர்கள் எச்சரிக்கை

world-viral-news
By Nandhini Sep 20, 2021 07:18 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

வட கொரியா அதன் முக்கிய யோங்பியான் அணுசக்தி வளாகத்தில் யுரேனியம் செறிவூட்டல் ஆலையை விரிவுப்படுத்தும் காட்சிகளை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தி இருக்கிறது. இது வடகொரியாவின் வெடிகுண்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தினை தெளிவுப்படுத்தியிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுடன் நீண்ட காலமாக செயலற்ற அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தைக்கு மத்தியில் வட கொரியா சமீபத்தில் 6 மாதங்களில் கடந்த நாட்களில் ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்துள்ளதனால் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த பதற்றங்களுக்கு மத்தியிலேயே அண்மைய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

செறிவூட்டல் ஆலை விரிவாக்கம் பெரும்பாலும் யோங்பியான் தளத்தில் ஆயுத தர யுரேனியம் உற்பத்தியை 25 சதவிகித்தால் வடகொரியா அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறது என்பதைக் குறிக்கிறது என்று நிபுணர்கள் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1ம் தேதி எடுக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் புகைப்படம், வட கொரியா மரங்களை அகற்றி கட்டுமானத்திற்கான நிலத்தை தயார் செய்ததையும் கட்டுமான அகழ்வாராய்ச்சியையும் காணக்கூடியதாக இருப்பதை வெளிக்காட்டி இருக்கிறது.

செப்டம்பர் 14ம் தேதி அன்று எடுக்கப்பட்ட இரண்டாவது படம். அந்தப் பகுதியை மூட ஒரு சுவர் எழுப்பப்பட்டதையும், ஒரு அடித்தளத்தில் வேலை செய்வதையும் மற்றும் புதிதாக அடைக்கப்பட்ட பகுதிக்கு அணுகலை வழங்குவதற்காக முன்னேற்றத்தையும் காண்பித்திருக்கிறது. 

வட கொரியாவின் ரகசியங்களை தெள்ளத்தெளிவாக அம்பலப்படுத்திய செயற்கைக்கோள்! நிபுணர்கள் எச்சரிக்கை | World Viral News