பிரெஞ்சு ஜனாதிபதியை ஹிட்லராக சித்தரித்தவருக்கு நேர்ந்த கதி! நீதிமன்றம் அதிரடி

world-viral-news
By Nandhini Sep 20, 2021 05:54 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அரசாங்கத்தின் கோவிட் -19 கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை அடோல்ஃப் ஹிட்லராக சித்தரித்து அவமதித்த 62 வயது முதியவர் குற்றவாளி என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரெஞ்சு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் விளம்பர நிர்வாகியான மைக்கேல்-ஏஞ்ச் ஃப்ளோரி, தெற்கு பிரான்சில் ஒரு விளம்பர பலகையில் ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் போல் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை சித்தரித்தார்.

இதற்காக அவருக்கு 10,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து ஃப்ளோரி கூறுகையில், "இதை என்னால் நம்ப முடியவில்லை, கேலிச்சித்திரத்திற்கான உரிமை இன்று புதைக்கப்பட்டுள்ளது" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். 

பிரெஞ்சு ஜனாதிபதியை ஹிட்லராக சித்தரித்தவருக்கு நேர்ந்த கதி! நீதிமன்றம் அதிரடி | World Viral News