ஸ்பெயினில் வெடித்துச் சிதறும் எரிமலை - மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் - பணிகள் தீவிரம்

world-viral-news
By Nandhini Sep 20, 2021 05:12 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கேனரி தீவு பகுதியிலுள்ள எரிமலை, திடீரென வெடித்துச் சிதறி லாலா குழம்பை வெளியேற்றி வருகிறது. இதனால் மலையடிவாரத்திலுள்ள 4 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

உடனடியாக இது குறித்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். 4 கிராமங்களைச் சேர்ந்த மக்களையும், விலங்குகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆயிரம் பேர் வரை மீட்கப்பட வேண்டியிருப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எக்காரணம் கொண்டும் எரிமலைக் குழம்பு அருகே பொதுமக்கள் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்திப்பட்டுள்ளனர். சாம்பல் புகை வெளியேறி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என ஸ்பெயின் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

எரிமலை வெடித்துச் சிதறுவதால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், ஐ.நா பொதுசபை கூட்டத்திற்கு செல்வதற்கான பயணத்தை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் தற்போது தள்ளி வைத்திருக்கிறார். 

ஸ்பெயினில் வெடித்துச் சிதறும் எரிமலை - மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் - பணிகள் தீவிரம் | World Viral News