செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்களின் ரத்தம், வியர்வை, கண்ணீர் கலந்த கான்கிரீட்!

world-viral-news
By Nandhini Sep 20, 2021 05:07 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

செவ்வாய் கிரகத்தில் கட்டுமானத்திற்காக இரத்தம், வியர்வை, விண்வெளி வீரர்களின் கண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி கான்கிரீட் உருவாக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய் கிரகம் தொடர்பாக விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை தினமும் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளிள், செவ்வாய் கிரகத்திற்கு கட்டுமானப் பொருட்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக விஞ்ஞானிகள் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

செவ்வாய் கிரகத்திற்கு ஒரு செங்கலை அனுப்ப $ 2 மில்லியன் செலவாகும் என்று சொல்லப்படுகிறது. 'மெட்டீரியல்ஸ் டுடே பயோ' இதழில் இந்த மாதம் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, செவ்வாய் கிரகத்திற்கு ஒரு செங்கலை கொண்டு செல்வதற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் செலவாகும்.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தின் எதிர்கால கட்டுமான பணியானது மிகவும் விலையுயர்ந்ததாக கூறப்படுகிறது. ஒரு புதிய ஆய்வில், யூரியா (சிறுநீர், வியர்வை, கண்ணீர் கலவை) உடன் இணைந்து, மனித இரத்தம் (மனித சீரம் அல்புமின்) மற்றும் வேற்று கிரக தூசி ஆகியவற்றை கொண்டு கான்கிரீட் போன்ற ஒரு பொருள் உருவாக்கபட்டிருக்கிறது. இந்த பொருள் 'ஆஸ்ட்ரோகிரீட்' என்ற பெயர் அழைக்கப்படுகிறது.

இது சாதாரண கான்கிரீட்டை விட வலுவானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், 6 விண்வெளி வீரர்களால் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் 2 வருட பணியின் போது 500 கிலோவுக்கு மேல் அதிக வலிமை கொண்ட ஆஸ்ட்ரோகிரீட்டை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். 

செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்களின் ரத்தம், வியர்வை, கண்ணீர் கலந்த கான்கிரீட்! | World Viral News