ஆப்கனில் தொடரும் கொடூரம் : அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளில் 3 பேர் பலி

world-viral-news
By Nandhini Sep 19, 2021 06:51 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் நடந்த அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதனால் மொத்த அதிகாரமும் தலிபான்களிடம் சென்றுள்ளது. ஆப்கனில் போதிய உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 5 வயதுக்கு உட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வருகிறார்கள். இந்த தகவலை யுனிசெப் அமைப்பு வெளியிட்டது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பி.டி.13 பகுதியில் திடீரென சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று நேற்று வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இதேபோன்று நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் தலிபான்களை இலக்காக கொண்டு அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடைபெற்றுள்ளன.

இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 3 பேர் பலியாகி இருக்கிறார்கள். 21 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். காயமடைந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்புகளில் 3 பேர் பொதுமக்கள் ஆவர். மற்றவர்கள் தலிபான் போராளிகள் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அந்நாட்டில் தலிபான்கள் பொறுப்பேற்ற பின்பு நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த முதல் குண்டுவெடிப்பு இதுவே ஆகும். இதற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆப்கனில் தொடரும் கொடூரம் : அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளில் 3 பேர் பலி | World Viral News