தனிமையின் கொடுமையில் ‘கிஸ்கா’ திமிங்கலம் : தன்னை தானே துன்புறுத்திக் கொள்ளும் வீடியோ வைரல்!

world-viral-news
By Nandhini Sep 18, 2021 06:22 AM GMT
Report

கனடாவில் 42 ஆண்டுகளாக சிறைப் பிடித்து தனிமையில் வைக்கப்பட்டிருந்த திமிங்கலம் ஒன்று தன்னை தானே துன்புறுத்திக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கனடாவில் நயகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் Marineland என்ற என்ற கடல்வாழ் பாதுகாப்பு மையம் அமைந்துள்ளது.

இந்த மையத்தில், ‘கிஸ்கா’ என்று பெயரிடப்பட்ட திமிங்கலம் சுமார் 42 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. திமிங்கல சரணாலய திட்டத்தின் கீழ் இந்த திமிங்கலம் அங்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஐஸ்லாந்து கடல் பகுதியில் வாழ்ந்த ‘கிஸ்கா’ தனிமையின் காரணமாக தற்போது கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் சமூக ஆர்வலர் பில் Marinelandக்கு சென்றுள்ளார்.

அப்போது கடும் மன உளைச்சலிலிருந்த ‘கிஸ்கா’ திமிங்கலம் சுவற்றில் அதன் தலையை அடிக்கடி முட்டிக்கொண்டது. இதைப் பார்த்த ‘பில்’ உடனே அதை வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டார். உடனடியாக கிஸ்காவை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதை பார்த்த மற்ற சமூக ஆர்வலர்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கோரிக்கையை அனைவரும் முன் வைத்து வருகின்றனர். ‘கிஸ்கா’ திமிங்கலத்திற்கு தற்போது 44 வயதாகிறது. கடந்த 1979ம் ஆண்டு பிறந்த கிஸ்காவை 2 வயதில் marinelandக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கிஸ்கா ஐந்து குட்டிகளை ஈன்றது.

ஆனால், அவை அனைத்தும் மிக குறுகிய காலம் மட்டுமே உயிருடன் இருந்தது. அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை குட்டி திமிங்கலங்கள் இருந்துள்ளது. 2011ம் ஆண்டுக்குப் பிறகு கிஸ்கா ஆண் துணையின்றி 10 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகிறது.

விலங்குகள் நல ஆர்வலர்கள் உடனடியாக கிஸ்காவை விடுவித்து அதன் உண்மையான வாழ்விடமான ஐஸ்லாந்து பகுதிகளில் மீண்டும் விட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.