திருமண வரவேற்பில் திடீரென வெடித்த மின்சாரப்பெட்டி : சட்டென மயங்கி விழுந்த மணமகள்

world-viral-news
By Nandhini Sep 18, 2021 05:40 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சென்னை வியாசர்பாடியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்சார பெட்டி வெடித்து சிதறியுள்ளது.

இதில் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். பின்னர், மண்டபத்தில் ஏற்பட்ட கசிவை சரிசெய்ய அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தார்கள். 2 மணி நேரத்திற்கு மேலாக ஆன பின்னரும் கூட தொடர்ந்து வியாசர்பாடி – மூலக்கடை சாலையில் திருமணத்திற்கு வந்தவர்கள் மறியலில் ஈடுபட்டார்கள்.

இந்நிலையில், மணமகனின் தந்தைக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அனைவரும் பதறிப்போய் நின்ற அந்த நேரத்தில் மணமகள் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனையடுத்து, இருவரையும் உறவினர்கள் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

இதனையடுத்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. மின்கசிவு காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.