விண்வெளிக்கு பயணமாகும் 4 பேரின் ஸ்பேஸ் எக்ஸ் - கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்
அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் மூலம் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்ப தயாராகி வந்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் ராக்கெட் மூலம் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்ப தயாராகி வருகின்றது. 'ஸ்பேஸ் எக்ஸ்' என்பது ஒரு விண்வெளிப் போக்குவரத்து வணிக நிறுவனம். இது 2002-ம் ஆண்டு பேபால் இணையதள பண பரிவர்த்தனை தொழில்நுட்பத்தின் தொழில்முனைவர் எலான் மசுக் என்பவரால் தொடங்கப்பட்டது.
சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பின்பு இத்தகைய தொழில்நுட்பத்தை விருத்தி செய்தது இவர்கள்தான். இது ஒரு தனியார் வணிக விண்வெளி நிறுவனமாகும். உலக அளவில் விண்வெளி சுற்றுலாத் தொழில் பிரபலமடைய ஆரம்பித்தது.
இதன் ஒருபகுதியாக அமெரிக்காவை சேர்ந்த 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனர் எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம் ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜாரிட் ஐசக் மேன் என்ற கோடீஸ்வரனின் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் இந்த வாரம் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த பயணத்திற்கான கவுண்டவுன் நாளை தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், இன்ஸ்பிரேஷன் - 4 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலம் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என்.9 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் பாய இருக்கிறது.
மணிக்கு 27,300 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பயணம் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட முதல் பொதுமக்கள் என்ற சிறப்பை இந்த 4 பேரும் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


