குத்துச்சண்டையில் ஜோ பிடனை ஒரு நொடியில் வீழ்த்திவிடுவேன்? டுவிட்டரில் ட்ரெண்டாகும் ட்ரம்ப் வீடியோ
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது வேடிக்கையான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர், சமீபத்தில் அவர் அதிபர் ஜோ பிடனை பற்றி சொன்ன ஒரு கருத்து சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடனை குத்துச்சண்டை போட்டியில் சுலபமாக வீழ்த்துவேன் என்று முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியிருந்தது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துக் கொண்ட முன்னாள் அதிபர் டிரம்ப் இவ்வாறு கலாய்த்தது அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
திருப்பது அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. வரவிருக்கும் குத்துச்சண்டை போட்டிக்கான சண்டைக்கு முந்தைய ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் அமெரிக்க அதிபரிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்குத் தான் டிரம்ப் இவ்வாறு பதிலளித்தார். யாருடனாவது குத்துச்சண்டை போட நேரிட்டால் யாருடன் சண்டை போடுவீர்கள் என்று டிரம்ப்பிடம் கேட்டனர்.
அதற்கு கொஞ்சம் கூட தயங்காமல் உடனடியாக பதிலளித்த ட்ரம்ப். குத்துச்சண்டை போட்டியில் அதிபர் ஜோ பைடனை சுலபமாக ஒரு சில நொடிகளில் வீழ்த்திவிடுவேன் என்று பேசினார். இந்த பதில் தான் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Trump was asked who he would pick if he had to choose someone to box. He said he would pick Joe Biden and that he would "go down within the first few seconds." pic.twitter.com/WbPzY7c556 — Benny (@bennyjohnson) September 9, 2021
Trump was asked who he would pick if he had to choose someone to box.
— Benny (@bennyjohnson) September 9, 2021
He said he would pick Joe Biden and that he would "go down within the first few seconds." ? pic.twitter.com/WbPzY7c556
முன்னாள் அதிபரின் இந்த பதில், டுவிட்டரில் பயனர்களிடையே ட்விட்டெராட்டி (Twitterati) நக்கல், நையாண்டி மட்டுமல்ல எண்ணற்ற மீம்ஸையும் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.
உண்மையில் முன்னாளுக்கும், இந்நாளுக்கும் இடையில் குத்துச்சண்டை நடைபெற்றால் வேடிக்கையாகதான் இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Rap Fact: Donald Trump is down to box Joe Biden on 9/11‼️?
— RapTV (@raptvcom) September 10, 2021
Who y'all got⁉️ pic.twitter.com/XEY4WvJQMT