‘விண்வெளியில் ஒலித்த நெருப்பு அலாரம்...’ - விண்ணில் உலாப் போன வீரர்கள் அதிர்ச்சி

world-viral-news
By Nandhini Sep 11, 2021 10:26 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யாவிற்கு சொந்தமான தொகுதியில், ஒலித்த புகை மற்றும் தீ அலாரம் பீதியை உருவாக்கியது என்று ரஷ்ய விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது.

விண்வெளி நிலையத்தில் ரஷ்யாவிற்கு சொந்தமான ஸ்வெஸ்டா சேவை (Zvezda service)தொகுதியில், புகையை கண்டறியும் ஸ்மோக் டிடெக்டர் அலாரம் ஒலித்ததால் பீதி ஏற்பட்டது. மேலும், விண்வெளி வீரர்கள் பிளாஸ்டிக் எரியும் வாசனை வருவதாக தெரிவித்தார்கள் என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

ஸ்வெஸ்டா சேவை தொகுதியில், இரவு முழுவதும் பேட்டரி ரீசார்ஜ் செய்யப்பட்டு, ISS குழு உறுப்பினர்களுக்கு தங்கி ஓய்வெடுப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றது. தீ அலாரம் ஒலித்ததையடுத்து, தேவையான பழுதுப்பார்க்கும் பணி மேற்கொள்ளும் வரை, விண்வெளி வீரர்களான ஒலெக் நோவிட்ஸ்கி மற்றும் பியோதர் டுப்ரோவ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே, சுமார் 7 மணி நேரம் விண்வெளி நடை மேற்கொண்டு, விண்வெளியில் நடந்து நேரத்தை கழித்தார்கள்.

பிரச்சனைகள் வியாழக்கிழமை அதிகாலையில் தொடங்கியது. இதனையடுத்து, இப்போது பழுதுகள் சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் நோவிட்ஸ்கி புகை வருவதை பார்த்தார். அத்துடன், பிளாஸ்டிக் எரியும் வாசனையும் வருவதாக கூறினார் என்று நாசா (NASA) அறிக்கையை வெளியிட்டது.

அதைப்போன்று, பிரெஞ்சு விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட், விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்ய பிரிவிலிருந்து அமெரிக்காவிற்கு சொந்தமான பிரிவுக்கு புகை பரவியதாகவும், எரிந்த பிளாஸ்டிக் அல்லது எலக்ரானிக் பொருள் வாசனை வந்ததாகவும் கூறினார்.

குழுவினர் காற்று வடிகட்டிகளைச் செயல்படுத்தி, காற்றின் தரம் இயல்பு நிலைக்கு வந்தவுடன் இரவு நேரத்தில் ஓய்வெடுக்க திரும்பினர் என Roscosmos நிறுவனம் கூறியிருக்கிறது. நாசா 'விண்வெளி அவசரநிலை' என்று அறிவித்த இந்த சம்பவம், விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்யப் பிரிவின் பாதுகாப்பு கவலைகளை தூண்டியிருக்கிறது. 

‘விண்வெளியில் ஒலித்த நெருப்பு அலாரம்...’ - விண்ணில் உலாப் போன வீரர்கள் அதிர்ச்சி | World Viral News