புகுஷிமா அணுசக்தி பேரழிவின் தாக்கம் - கண்காணிப்பில் ஈடுபடும் பாம்புகள்
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் புகுஷிமா டாய்-இச்சி அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள கதிர்வீச்சு அளவை கண்காணிக்க பாம்புகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஜப்பானில் 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து, டாய்-இச்சி அணுமின் நிலையத்தின் அனைத்து உலைகளும் செயல்பாடுகளை நிறுத்தியது. 1 எண் உலையில் குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்துள்ளது.
இதனால், வெப்பம் அதிகரித்து, வெடிவிபத்து ஏற்பட்டது. உலையின் உட்புறத்தில், அணுக்கரு பிளப்புக்குத் தேவையான மூலப் பொருட்களான சீசியம் 137, ஐயோடின் 131 போன்ற தனிமங்கள் கண்டறியப்பட்டன. அதுமட்டுமல்ல, அணுக் கழிவு கலந்த நீர் வெளியேறியதால் அணுக்கதிர் வீச்சு அபாயம் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு டாய் இச்சி அணுமின் நிலையத்தை ஒட்டி 20 கி.மீ., சுற்றுவட்டாரத்தில் வசித்த சுமார் 150,000 மக்கள் வெளியேற்றிவிட்டார்கள்.
அப்போது, ஜப்பான் அணுசக்தி பாதுகாப்பு முகமை நிர்ணயித்திருந்த சட்டப்பூர்வ கதிர்வீச்சு அளவை விட 3 மடங்கு அதிக கதிர்வீச்சுகள் வெளியானது. இதனையடுத்து, ஆய்வுகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் அணு உலையில் நீண்டகால கதிர்வீச்சு வெளிப்பாட்டைப் புரிந்துகொள்வதற்காக பாம்புகளுக்கு கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் டோசிமீட்டர்களை பொருத்தி இருக்கிறார்கள்.
இந்த ஆய்வில், இக்தியாலஜி மற்றும் ஹெர்பெட்டாலஜி சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னதாக பாலூட்டிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி, தற்போது பாம்புகள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. "பாம்புகள் சுற்றுச்சூழல் அமைப்புகளில் மிக முக்கியமானவை. ஏனெனில் அவை வேட்டையாடுப்பவையாகவும், இரையாகவும் இருக்கிறது என்று இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளவர்களில் ஒருவரான ஹன்னா கெர்கே தெரிவித்தார்.
அவரது குழு 134 முதல் 137 ரேடியோசியம் வரையிலான கதிர்வீச்சு அளவை கண்காணிக்க முடிந்தது. இந்த சோதனைக்காகப் பிடிக்கப்பட்ட எலி மற்றும் பாம்புகளின் இயக்கம் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்தது இது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், ஆலையின் விலக்கு மண்டலத்திற்குள் இருக்கும் பாம்புகள், வெளியில் இருப்பவற்றுடன் ஒப்பிடுகையில் 22 மடங்கு அதிகமாக ரேடியோசியத்தின் அளவைக் காட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். ஜப்பானில் வாழும் மக்கள் இந்த மண்டலத்தில் வாழ வேண்டாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் கதிர்வீச்சினால் அவர்களுக்கு தீங்கு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
