பத்திரிக்கையாளர்களை அரைநிர்வாணப்படுத்தி தாக்கிய தலிபான்கள் - அதிர்ச்சி புகைப்படம் வெளியானது!
ஆப்கானிஸ்தானில் பத்திரிக்கையாளர்களை அரை நிர்வாணப்படுத்தி தலிபான்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக நாடுகளை பேரதிர்ச்சியாக்கி உள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர்.
தலிபான்களின் ஆட்சியை விரும்பாத வெளிநாட்டவர் மற்றும் உள்ளூர் மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட தலிபான்கள், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், பத்திரிக்கையாளர்கள் இருவரை அரை நிர்வாணமாக்கி, தாக்குதல் நடத்தியது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தலிபான்களால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் தங்களது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எதிலாட்ரோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பெண்கள் போராட்டம் தொடர்பான செய்தியை சேகரிக்கச் சென்ற தங்களது நிறுவன பத்திரிக்கையாளர் மற்றும் வீடியோ எடிட்டரை தலிபான்கள் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Face of journalist in #Kabul. pic.twitter.com/Pwjjgtq0RI
— Zaki Daryabi (@ZDaryabi) September 8, 2021