உறவினர்கள் முன்னிலையில் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட மாடல் அழகி!

world-viral-news
By Nandhini Sep 09, 2021 04:47 AM GMT
Report

மனிதர்கள் எப்போதும் விசித்திரமானவர்தான். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு விசித்திரமான குணம் ஒளிந்துக் கொண்டிருக்கும். அந்த விசித்திரங்களைச் செய்வதற்காகவே புறக்காரணிகளால் தூண்டப்படுவார்கள். பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி ஒரு விசித்திரமான செயலை செய்துள்ளார். தன் வாழ்வில் பல முறை காதல் பிரேக்அப்களை சந்தித்த கிரிஸ் கேலரா

என்ற மாடல் அழகி இதுக்கு மேல் முடியாதுடா சாமி என்று தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்து விட்டார். அதாவது தன்னை தானே அவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். 33 வயதான கிரிஸ் கேலராவுக்கு பல ஆண்களுடன் பல்வேறு காலக்கட்டங்களில் காதல் மலர்ந்திருக்கிறது. ஆனால் ஒரு காதல் கூட அவருடன் நிலைக்கவே இல்லை. அனைத்தும் முறிந்துக் கொண்டுள்ளார்.

இதனால் விரக்தியின் உச்சிக்கே சென்ற அவர் தன்னை தானே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார். அதன்படி கிரிஸ் கேலராவின் திருமணம் அவரது பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது. திருமண நிகழ்வில் கிரிஸ் கேலராவின் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.

இதுதொடர்பாக கிரிஸ் கூறுகையில், “நான் எப்போதும் தனியாக இருக்க பயப்படுவேன். ஆனால், தற்போது அதனை நானே தேர்வு செய்து விட்டேன். நானே என்னை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னை நானே காதலிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதை உணர்ந்த நிலையில் கொண்டாட முடிவு செய்தேன். என்னை நானே திருமணம் செய்து கொண்டேன். இது அற்புதமான நிகழ்வு. என்னவேண்டுமானாலும் மற்றவர்கள் என்னைப் பற்றி பேசட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்றார்.   

உறவினர்கள் முன்னிலையில் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட மாடல் அழகி! | World Viral News