ஆப்கானில் இரத்தவெறி கொண்ட பயங்கரவாதி புதிய உள்துறை அமைச்சரானார்!
அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட அமைப்பின் தலைவர் தான் இந்த சிராஜுதீன் ஹக்கானி. இவர்தான் இனி புதிய தாலிபான் பொறுப்பாளராளராகவும், அரசாங்கத்தின் முக்கிய பகுதியாக இருப்பார் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதற்கு மிகவும் பிரபலமாக இல்லாத ஒரு நபரை தாலிபான் அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தானின் புதிய உள்துறை அமைச்சர் அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹக்கானி அமைப்பின் நிறுவனரது மகன்தான் சிராஜ் ஹக்கானி. தற்போது, ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தாலிபான் அமைப்பு அனைத்து பயங்கரவாத இயக்கங்களுடனும் தன்னுடைய உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே கூறியிருந்தார். இருந்தாலும், ஹக்கானி இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவருக்கு தாலிபான் அமைப்பு தனது அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பை கொடுத்துள்ளது.
இதனையடுத்து, தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், புதிய அமைச்சரவை பல்வேறு இனங்கள் மற்றும் பின்னணிகளை உள்ளடக்கிய மாறுபட்ட குழுவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஹக்கானி தாலிபானின் புதிய உள்துறை அமைச்சர். அவர் ஒரு இரத்தவெறி கொண்ட பயங்கரவாதி. அவரை பிடித்து தருபவர்களுக்கு நாங்கள் ஏற்கனவே பரிசை அறிவித்துள்ளோம் என்று உளவுத்துறை செனட் தேர்வுக் குழு உறுப்பினர் செனட்டர் பென் சாஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
