காபூலில் பாகிஸ்தானுக்கு எதிரான பேரணி - கூட்டத்தை கலைக்க தாலிபான் துப்பாக்கிச் சூடு

world-viral-news
By Nandhini Sep 07, 2021 12:30 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதை எதிர்த்து காபூலில் தெருக்களில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆப்கானியர்கள் கலைக்க தலிபான்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பல ஊடக தகவல் தெரிவித்துள்ளன.

காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே இந்த போராட்டங்கள் நடைபெற்றதாகவும், ஆப்கானிஸ்தான் தலைநகரில் பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) தலைவர் பயணம் மேற்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த போராட்டங்கள் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவுத் தலைவர் ஃபைஸ் ஹமீத் சனிக்கிழமை காபூலுக்கு பயணம் மேற்கொண்டார்.

அவரது நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தானில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் ஆப்கானிஸ்தான் இராணுவத்தை மறுசீரமைக்க தாலிபான்களுக்கு ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் உதவ முடியும் என்று தெரிவித்திருந்தார்.

இஸ்லாமாபாத் குற்றச்சாட்டுகளை இந்த மறுத்தாலும், காபூலில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்திற்கு எதிரான 20 ஆண்டு காலப் போராட்டத்தில் தலிபான்களுக்கு பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐ ஆதரவளிப்பதாக வாஷிங்டன் குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.