பஞ்ச்ஷீரில் தாலிபானுக்கு பாகிஸ்தான் உதவி- தொடர்ந்து அங்கு பதற்றம் நீடிப்பு
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, தாலிபான் கட்டுப்பாட்டுக்குள் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு இன்னும் தாலிபான்களால் கைப்பற்ற முடியவில்லை.
இதனையடுத்து, அப்பகுதியை தாலிபான்கள் கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் இராணுவம் உதவுவதாகவும், பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் தாலிபான் கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலில் பாகிஸ்தான் பெரிய அளவில் ஆதரவு அளித்து வருவதாகவும் ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணியின் தலைவர் அஹ்மத் மசூத் பேசியதாவது - பாகிஸ்தான் போர் விமானங்கள் பஞ்ச்ஷீரில் குண்டுகளை வீசு வருகிறது.
தங்களது எதிர்ப்பை நசுக்குவதில் தாலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவி செய்து வருகிறது. பஞ்ச்ஷீரில் பாகிஸ்தான் மற்றும் தாலிபான்கள் நடத்திய குண்டுவீச்சில் பாஹிம் மற்றும் மசூத்தின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.
பாகிஸ்தான் நேரடியாக பஞ்ச்ஷீரில் ஆப்கானிஸ்தானை தாக்கியதாகவும், சர்வதேச சமூகம் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறது. தனது கடைசி சொட்டு இரத்தம் உள்ள வரை இந்த போராட்டத்தை கைவிடமாட்டேன். பாகிஸ்தானின் உதவியுடன் தாலிபான் காட்டுமிராண்டிகளாக தங்களைத் தாக்கி வருகின்றனர். "தாலிபான்கள் இன்னும் சிறிதும் மாறவில்லை.
அதை அவர்களே நிரூபித்து விட்டனர். தாலிபான்கள் ஆப்கானியர்கள் அல்ல, அவர்கள் வெளியாட்கள், வெளிநாட்டவர்களுக்காக வேலை செய்கிறார்கள். மேலும் ஆப்கானிஸ்தானை உலகின் மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்த விரும்புகிறார்கள்.
பஞ்ச்ஷீரில் நிலைமை இன்னும் பதட்டமாக இருக்கிறது. ஒரு புறம் பஞ்ச்ஷீர் மாவட்டம் தங்களது பிடியில் வந்து விட்டதாக தாலிபான் தெரிவித்துள்ளனர். ஆனாலும், பஞ்ச்ஷீர் எதிர்ப்பாளர்களின் கையே ஓங்கி உள்ளதாக அவர் கூறினார்.
