காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை!

world-viral-news
By Nandhini Sep 06, 2021 12:03 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் பிடிக்க முயன்றபோது என்கவுண்டர் நடந்துள்ளது. இதில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், எல்லை வழியாக காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை உளவுத்துறை அமைப்புகள் ரகசியமாக கண்காணித்து அடிக்கடி தகவல்களை கொடுத்து வருகிறது.

இந்நிலையில், வடக்கு காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாராமுல்லா, பந்தி போரா, குப்போரா ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகளை விட வெளிநாட்டு பயங்கரவாதிகள் அதிகளவில் உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

போலீசாரின் சமீபத்திய தகவல்களின்படி ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகள் 11 பேர் இருக்கிறார்கள் என்றும், 40 முதல் 50 வெளி நாட்டு பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதிகளின் மையமாக இருந்த தெற்கு காஷ்மீருடன் ஒப்பிடும் போது கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக வடக்கு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து, அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட ஏராளமான பயங்கரவாதிகளை விடுவிக்கப்பட்டனர். இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்து வருவதாக சமீபத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் வட காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவினார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், இதனை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை நீண்ட காலமாக அதிகரித்து வருகிறது. இதனுடன் ஆப்கானிஸ்தானின் சமீபத்திய சூழ்நிலைகளுடன் ஒப்பிடமுடியவில்லை என்றார். வடக்கு காஷ்மீரில் வெளிநாட்டு பயங்கரவாதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் முக்கிய தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை! | World Viral News