கர்ப்பிணி போலீஸ் அதிகாரியை குடும்பத்தின் முன் கொடூரமாக படுகொலை செய்த தாலிபான்கள் - அதிர்ச்சி சம்பவம்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, அங்கு வாழும் பொது மக்கள், குறிப்பாக பெண்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். அமெரிக்க படைகள் முழுமையாக விலகிக்கொண்டு வெளியேறிவிட்டது.
இந்நிலையில், பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்களை வேலைக்கு போவதை அனுமதிக்காத தாலிபான் பயங்கரவாதிகள், ஆப்கானை சேர்ந்த பெண் நீதிபதிகள், காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மத்திய கோர் மாகாணத்தின் தலைநகரான பிரோஸ்கோ என்னும் பானு நெகர் என்பவர் தாலிபான்களால் படுகொலை செய்யப்பட்டார்.
தாலிபான்கள் தங்களுக்கு அடிபணியாதவர்களை வீடு வீடாக தேடிச் சென்று கொன்று குவித்து வருகிறார்கள். இதில் எட்டு மாத கர்ப்பிணியான பானு நெகார் பிரோஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் தாலிபான்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி ஏந்திய 3 பேர் அவரை, அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கொலை செய்ததோடு, பின்னர் குடும்ப உறுப்பினர்களையும் கொன்றுள்ளனர்.
வீட்டில் ரத்தம் சிதறிய சுவர்கள் மற்றும் அவரது சிதைந்த சடலத்தைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தாலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹீத் இது குறித்து கூறுகையில், இந்த சம்பவத்திற்கும், தாலிபான்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை நான் உறுதிப்படுத்தவில்லை.
எங்கள் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றார். முன்னதாக, முந்தைய நிர்வாகத்தில் பணியாற்றிய மக்களுக்கு தலிபான் பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்தனர். ஆனால், முந்தைய அரசின் பணியாற்றியவர்கள் மீது தொடர்ந்து தாலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்த வார தொடக்கத்தில், ஆப்கானிஸ்தானின் சிறந்த பெண் காவலர் குலாப்ரோஸ் எப்டேகர் தாலிபான்களின் 'மிருகத்தனமான' தாக்குதலுக்குள்ளாகி, பின் தப்பி ஓடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
