பஞ்ச்ஷீரில் போர் நிறுத்தம் - தலிபான்களிடம் பணிந்ததா ஆப்கான் எதிர்ப்புப்படை?
தலிபான்கள் 34 மாகாணங்களை கொண்ட ஆப்கானிஸ்தானில் 33 மாகாணங்களை கைப்பற்றிவிட்டார்கள். ஆனால், ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணம், தேசிய எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைக்க தலிபான்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், அவர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது பாஞ்ச்ஷீர் மாகாணம். இவர்கள் எப்போதும் யாரிடமும் அடிபணிந்ததே கிடையாது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, பஞ்ச்ஷீர் மாகாணத்தை கைப்பற்ற தலிபான்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தேசிய எதிர்ப்பு முன்னணி அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தேசிய எதிர்ப்பு முன்னணி படையினர் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அப்பகுதியில், தலிபான்களின் தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தேசிய எதிர்ப்புப் படையினர் பணிந்திருக்கிறார்கள். பஞ்ச்ஷீர் மாகாணத்திலிருந்து வெளியேற வேண்டும் என தலிபான்களுக்கு தேசிய எதிர்ப்பு முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
