மார்க்கெட்டுக்குள் நுழைந்த ISIS பயங்கரவாதி! திடீரென கத்தியால் சராமரி தாக்கிய வீடியோவால் பரபரப்பு

world-viral-news
By Nandhini Sep 05, 2021 07:05 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

நியூசிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் ISIS பயங்கரவாதி ஒருவன் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக கத்தியால் தாக்கிய சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் ஆக்லாந்து நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூப்பர் மாக்கெட்டுக்குள் ISIS பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் நேற்று திடீரென நுழைந்தான். அவன் திடீரென அங்கிருந்த சிலர் மீது கத்தியால் சரமாரியாக தாக்கினார். இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவனை சுட்டு வீழ்த்தினர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவன் காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்திலிருந்து வந்தவன் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறுகையில், கடந்த 2011-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த அந்த நபர் நியூசிலாந்து வந்தான். பின்னர் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் அவன் இருந்துள்ளான்.

ஆக்லாந்து நகர்ப்புற பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்ற அவன் அங்கிருந்து கத்தியை எடுத்து மக்களை சரமாரியாகத் தாக்கியுள்ளான். இதில், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவரை கண்காணித்து வந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டான். காயம் அடைந்தவர்களில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. IS பயங்கரவாத இயக்கத்தால் கவரப்பட்ட அந்த நபர் இந்த வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளதாக மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார். 

மார்க்கெட்டுக்குள் நுழைந்த ISIS பயங்கரவாதி! திடீரென கத்தியால் சராமரி தாக்கிய வீடியோவால் பரபரப்பு | World Viral News

மார்க்கெட்டுக்குள் நுழைந்த ISIS பயங்கரவாதி! திடீரென கத்தியால் சராமரி தாக்கிய வீடியோவால் பரபரப்பு | World Viral News