துபாயில் சுட சுட தங்க பிரியாணி, 22k தங்க முலாம் பூசப்பட்ட வட பாவ்! விரும்பி சாப்பிடும் மக்கள்

world-viral-news
By Nandhini Sep 03, 2021 03:36 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

துபாய், கராமாவில் அமைந்துள்ள ‘O’Pao என்ற உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் இந்திய உணவுகளுக்கு பெயர் பெற்றது. தற்போது இந்த உணவகம் 'விலைமதிப்பற்ற' வடா பாவ் சிற்றுண்டியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வடா பாவ் சிற்றுண்டி ரூ.2,000. ஆச்சரியமாக உள்ளதா? ஆம் இந்த வடா பாவ் சிற்றுண்டியில் தங்க முலாம் பூசப்பட்டிருக்கும். இந்த வடா பாவ் அங்கேயே சாப்பிட மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

பேக் செய்து வீட்டிற்கு எடுத்துப் போக முடியாது. இது குறித்து மஸ்ரத் தாவூத் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையதளவாசிகளை ஆச்சரியப்படும் வகையில் உள்ளது.

வீடியோவில் வட பாவ் மரத்தால் செதுக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. 22k தங்க முலாம் பூசப்பட்ட வட பாவ், ஒரு பக்கத்தில் இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் புதினா எலுமிச்சம்பழத்துடன் வருகிறது.

இதோ அந்த வீடியோ -