'மக்களை ஆட்டிப்படைக்கும் மற்றொரு பயங்கரமான வைரஸ்' - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றம் எடுத்து, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ், அடுத்ததாக மியு (MU) B.1.621 என்ற உருமாற்றம் அடைந்துள்ளதாகவும், தடுப்பூசிகளால் இதனை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலகமே இன்னும் கொரோனாவில் பிடியிலிருந்து மீள முடியாமல் தவித்தளித்து வருகிறது.
மேலும் கொரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், கொரோனா தொற்று ஆல்ஃபா, டெல்டா என உருமாறிக் கொண்டே வருகிறது.
கடந்த மே மாதம் கூட தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய சி.1.2 வகை வைரஸ் அதிவேகமாகப் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு தேசிய தொற்றுநோய் நிறுவனம் (என்ஐசிடி) மற்றும் குவாசூலு-நடால் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கூறியிருந்தார்.
இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் முதன்முதலாக உருமாறிய ஒரு வடிவம் பி.1.621 கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்போதும் ‘மு’ என்று அழைக்கப்படுகிறது. அதன்பின்னர் ஆங்காங்கே இந்த வைரஸ் காணப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
கொலம்பியா மட்டுமல்லாது தென் அமெரிக்காவிலும், அமெரிக்கா, ஐரோப்பியாவிலும் குறிப்பாக இங்கிலாந்து, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கிலும் ‘மு’ வைரஸ் பாதித்திருக்கிறது. அதே சமயம், இது உலகளாவிய பாதிப்பைக் கொண்டிருந்தாலும்கூட தற்போது இதன் பரவல் விகிதம் 0.1 சதவீதத்துக்கு குறைவாகவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருந்தாலும், கொலம்பியாவில் 39 சதவீதமும், ஈக்குவடாரில் 13 சதவீதமும் இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு இந்த வைரசை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறியுள்ளன. இது உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு பட்டியலிலும் ‘மு’ வைரஸ் இடபெற்றிருக்கிறது. தற்போது 39 நாடுகளில் ‘மு’ வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய உருமாறிய வைரஸானது, தடுப்பூசிக்கு தப்பிவிடும் அறிகுறிகளை கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ஆனாலும், இதை உறுதி செய்ய மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. ஒரு புறம் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, செலுத்தப்பட்டு வரும் வேலையில், புதிது புதிதாக கொரோனா உருமாற்றம் அடைவது மொத்த உலகையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
