‘தலிபான்களுக்கு தங்குமிடம், கல்வி கற்க வசதி செய்து கொடுத்தோம்’ - பாகிஸ்தான் ஒப்புதல்

world-viral-news
By Nandhini Sep 02, 2021 08:33 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இஸ்லாமாபாத் நீண்ட காலமாக தலிபான்களின் பாதுகாவலராக இருந்தார் என்பதை பாகிஸ்தானின் உள்துறை ஒப்புக் கொண்டுள்ளது. அமைச்சர் ஷேக் ரஷீத், தாலிபன்களுக்கு அடைக்கலம் கொடுத்து வலுப்படுத்த பாகிஸ்தான் அரசு பணியாற்றியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

தங்களுடைய ஒத்துழைப்பு காரணமாகவே 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபன்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தலிபான்களின் மிகப்பெரிய 'பாதுகாவலர்' என பாகிஸ்தானின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது சர்வதேச அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

பாகிஸ்தானின் ஒப்புதல் வாக்குமூலத்தை கொடுத்திருப்பவர் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் என்பதால், இந்த வாக்குமூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள இந்த அறிக்கை பல கேள்விகளை தற்போது எழுப்பியுள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு, இந்தியா மீது காழ்ப்புணர்வு உள்ளது.

இந்நிலையில், இந்த ஒப்புதல் வாக்குமூலம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுவதாக அமைந்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஷீத் கூறுகையில், பாகிஸ்தானில் தலிபான்களுக்கு தங்குமிடம், மற்றும் வீடு கொடுத்தோம், அதோடு கல்வி கற்பதற்கான வசதிகளையும் செய்துக் கொடுத்தோம். நாங்கள் தாலிபான்களுக்கு எல்லாவற்றையும் செய்தோம் என்று கூறியது வியப்படைய வைத்தள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, ஆகஸ்ட் 28ம் தேதி அன்று ஒரு சர்ச்சையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ஆப்கானிஸ்தானை இஸ்லாமாபாத் தொடர்ந்து ஆக்கபூர்வமான வழிகளில் ஆதரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். 

‘தலிபான்களுக்கு தங்குமிடம், கல்வி கற்க வசதி செய்து கொடுத்தோம்’ - பாகிஸ்தான் ஒப்புதல் | World Viral News