இவர் தான் ஆப்கானின் சுப்ரீம் லீடர்- தாலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் புதிய தாலிபான் அரசில், அனைத்து அதிகாரமும் பெற்ற சுப்ரீம் தலைவராக ஹைபத்துல்லா அஹுன்ஸாடா இருப்பார் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய அரசாங்கத்தில் ஒரு பிரதமர் பதவியும் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதாக டோலோ நியூஸ் தெரிவித்திருக்கிறது. "தாலிபானின் தலைவரான முல்லா ஹைபத்துல்லா அஹுன்ஸாடா, புதிய அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராகவும் இருப்பார்" என்று தாலிபானின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அனாமுல்லா சமங்கனி தகவல் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் அறிவிக்கும் இஸ்லாமிய அரசு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். அரசாங்கத்தில் விசுவாசமான தளபதியான ஹைபத்துல்லா அஹுன்ஸாடா இருப்பதில் சந்தேகம் கிடையாது.
அவர் அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராக இருப்பார் என்று கூறினார். இந்நிலையில், தாலிபான்கள் செப்டம்பர் 3ம் தேதி, ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
