“அமெரிக்கர்களை தோற்கடித்த பெருமை தலிபான்களின் மாபெரும் வரலாற்று வெற்றி” – பின்லேடனின் அல்கொய்தா!

world-viral-news
By Nandhini Sep 02, 2021 05:33 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் வெளியேறியுள்ளது.

ஆனால், ஏன் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். அதற்கான பதில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பிலிருந்து தொடங்குகிறது.

அல்கொய்தா என்றால் ஒசேமா பின்லேடன் தான் அனைவருக்கும் நினைக்கு வரும். 2001 செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரிலுள்ள இரட்டைக் கோபுரம் விமானங்கள் மூலம் தகர்க்கப்பட்டது. இதன் பின்னணியில் அல்கொய்தா பயரங்கவாத அமைப்பின் தலைவனான ஒசேமா பின்லேடனுக்கு தொடர்பு இருந்ததாக அமெரிக்கா சந்தேகப்பட்டது.

அல்கொய்தா அமைப்பினர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் அல்கொய்தா பயங்கரவாத குழுவினர் செயல்பட்டு வந்தார்கள். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பின்லேடனுக்கும் அவரது அமைப்பினருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக அமெரிக்க உளவுத்துறைக்கு ரகசிய தகவல் சென்றது.

இதனால், கோபமடைந்த அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ், பின்லேடனை சுட்டுத் தள்ள முடிவு செய்தார். இதனையடுத்து, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தலிபான்களை ஒரு வழி செய்ய வேண்டும் என களத்தில் இறங்கினார். ராட்சத பீரங்கிகளை ஆப்கானிஸ்தானில் இறக்கி போரை தொடங்கினார்.

அப்போதே ஆப்கானிஸ்தான் ஏகாதிபத்தியங்களின் சுடுகாடு; இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என உலக அரசியல் வல்லுநர்கள் புஷ்ஷிடம் எச்சரிக்கை செய்தார்கள். ஆனால் அதையெல்லாம் அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

தலிபான்கள், அல்கொய்தா அமைப்பினருடன் போரிட்டு பின்லேடனையும் தலிபான்களின் ஆட்சியையும் ஒழித்துக் கட்டியது அமெரிக்கா முடிவு செய்தது. அப்போதிருந்துதான் தலிபான்களின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்தது. ஆனால் அவர்கள் மறைந்திருந்து கொரில்லா முறையில் அவ்வப்போது அமெரிக்க வீரர்களைக் கொன்று குவித்து வந்தனர்.

இது முடிவடையாத போர் என்று நினைத்த அமெரிக்கா படைகளை வாபஸ் பெற்று வந்தது. ஒபாமா ஆட்சிக்காலத்தில் தொடங்கிய இந்த நடைமுறை டிரம்ப் ஆட்சி வரையிலும் தொடர்ந்து வந்தது. டிரம்ப் ஆட்சிக்காலத்தில் தோஹா ஒப்பந்தம் போடப்பட்டது. அதனை தற்போதைய அதிபர் ஜோ பைடன் செயல்படுத்தி உள்ளார்.

டிரம்ப் போட்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்க படைகள் ஆகஸ்ட் 31ம் தேதியோடு மொத்த படைகளையும் நாட்டிற்கு திரும்பி அழைத்துச் செல்ல வேண்டும். அதன்படி பைடன் மொத்த படைகளையும் அழைத்துச் சென்றுவிட்டார். இந்நிலையில், அல்கொய்தாவின் வாய்ஸ் ரெய்ஸ் ஆனது. அவர்கள் தில்லாக அமெரிக்க நாளிதழுக்கு அமெரிக்காவை அவமானப்படுத்தி செய்தி அனுப்பினார்கள்.

அதில், “ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவத்தை விரட்டி தலிபான்கள் வரலாற்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் புனித குர்ஆனின் வாசகங்களைக் கேட்பதன் மூலம் அவர்களின் இதயம் அமைதி அடையட்டும்.

நம்பிக்கையற்றவர்களின் தலைமையாக இருந்த அமெரிக்கர்களை அவமானப்படுத்தி, தோற்கடித்த பெருமை, புகழ் சர்வ வல்லமை படைத்த இறைவனையே சேரும்.

இஸ்லாமிய மண்ணிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்காவின் உலகளாவிய மரியாதையைச் சிதைத்து, நீக்கி அவமானப்படுத்தி திருப்பி அனுப்பிய பெருமை இறைவனையே சேரும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.